பாலக்காடு:பாலக்காட்டில் காரில் கஞ்சா கடத்திய மூவர் கைது செய்யப்பட்டனர்.
பாலக்காடு எக்சைஸ் சிறப்பு படையினர், நேற்று கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலை வாளையார் சோதனை சாவடி அருகே வாகன சோதனை நடத்தினர். கோவையில் இருந்து பாலக்காடு நோக்கி வந்த காரை நிறுத்தி நடத்திய சோதனையில், இரண்டு கிலோ கஞ்சா மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 2 லட்சம். காரில் இருந்த மலப்புரம் பொன்னானியை சேர்ந்த ஷபீக் 21, அமல் பஷீர் 19, ராகுல் 27, ஆகியோரை கைது செய்தனர். காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE