கோவை:கோவை-மும்பை இடையே புதிய நேரடி விமான சேவையை 'கோ ஏர்' இண்டியா இன்று (24ம் தேதி) முதல் துவக்குகிறது.
இரு நகரங்களுக்கு இடையிலான நேரடி விமான சேவைக்கு 'ஏர்பஸ் 320' நியோ விமானம் இயக்கப்படுகிறது. இந்த விமானம் மும்பையில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு, 2.30 மணிக்கு வந்தடையும். கோவையில் இருந்து 3.00 மணிக்கு புறப்பட்டு மும்பைக்கு மாலை, 4.50 மணிக்கு சென்றடையும்.
கோ ஏர்' தலைமை செயல் அதிகாரி கவுசிக் கோனா கூறியதாவது:உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை, நவ., வரை, 63.54 லட்சமாக உள்ளது. ஒவ்வொரு மாதமும், 10 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தேவையின் அடிப்படையில், புதிய விமான சேவையை கோவைக்கு துவக்குகிறோம்.
கோவை - மும்பை இடையிலான புதிய நேரடி விமான சேவை, கோவையில் வணிகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். கோவையில் இருந்து ஊட்டி செல்லும் திட்டமும் உள்ளது. மேலும், தகவலுக்கு 'கோ ஏர்' இணையதளம் அல்லது, 080-47112757 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE