கோவை:கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த, மலையாள திரைப்பட இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மலையாள சினிமாவில் எடிட்டராக இருந்து, 2015ல், 'கரி' என்ற படத்தில் இயக்குனராக கால் பதித்தவர் ஷாநவாஸ்,37. இவர், பிரபல நடிகர் ஜெயசூர்யாவை வைத்து, 'சூபியும், சுஜாதாவும்' என்ற படத்தை இயக்கி இருந்தார். கொரோனா பரவல் காரணமாக இந்த படம் ஓ.டி.டி., தளத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், பாலக்காடு அருகே அட்டப்பாடியில், தனது அடுத்த படத்திற்கான கதை எழுதும் பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த சனிக்கிழமை இரவு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்ததாக, டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த தகவல் கேட்டு மலையாள திரையுலகத்தினர், ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE