திருப்பூர்:கொரோனா சூழலில், ரசிகர்களை தியேட்டர்களுக்கு வரவழைக்க, திருப்பூரில் 'ப்ரைவசி' தியேட்டர் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா அச்சம், பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகாதது உட்பட பல்வேறு காரணங்களால், குறைந்த எண்ணிக்கையிலேயே ரசிகர்கள் தியேட்டருக்கு செல்கின்றனர். ரசிகர்களை வரவழைக்க, 'ப்ரைவசி' தியேட்டர் என்னும் புதிய ஐடியா, திருப்பூரில் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதை, தனது தியேட்டரில் அறிமுகப்படுத்தியுள்ள, தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்களின் சங்க தலைவர், திருப்பூர் சக்தி சுப்ரமணியன் கூறியதாவது:'ப்ரைவசி' தியேட்டரில் 3,999 ரூபாய் கட்டணமாக செலுத்தினால், 25 நபர்கள் வரை அனுமதிக்கப்படுவர். அதற்கு மேல், ஒவ்வொரு நபருக்கும், 120 ரூபாய் கட்டணம். எந்தப்படம் பார்க்க விரும்புகிறீர்களோ, அதை முன்பதிவு செய்யும் பட்சத்தில், அந்த படம் திரையிடப்படும்.
புதிய படங்களை, மூன்று நாள்கள் கழித்து, 'ப்ரைவசி' தியேட்டரில் பார்க்கலாம்.இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், 100 சதவீதம் இருக்கை நிரப்ப, முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE