ஊட்டி:பிரிட்டன் சென்று ஊட்டி திரும்பிய, 16 பேரை சுகாதாரத் துறையினர் பரிசோதித்து வீட்டில் தனிமைப்படுத்தினர்.
பிரிட்டனில் உருவெடுத்துள்ள, புதிய ரக கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, அனைத்து விமான நிலையங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியை சேர்ந்த, 16 பேர் பிரிட்டனில் இருந்து விமானத்தில் சென்னை வந்து, அங்கிருந்து கோவை விமான நிலையம் வந்தனர். பின், ஊட்டி திரும்பினர். இவர்களின் முகவரி கண்டறியப்பட்டு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில், ''சுகாதாரத் துறை வழிகாட்டுதலை கடைபிடித்து, மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். பிரிட்டனில் இருந்து வந்த, 16 பேரில், யாருக்கும் தொற்று இல்லை. வீட்டு கண்காணிப்பில் உள்ளனர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE