சம்பவம் செய்தி

தமிழ்நாடு

300 பவுன் நகை வழிப்பறியில் திருப்பம் 2 போலீசார், ரவுடிகள் உட்பட ஐவர் கைது

Added : டிச 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே நகை கடை உரிமையாளர் மகனிடம் 300 பவுன் நகையை வழிப்பறி செய்த வழக்கில் மூளையாகச் செயல்பட்ட இரு போலீசார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்தர் 58; திருவள்ளூரில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். மீட்கப்படாத நகைகளை உருக்கி புதிய நகைகளாக மாற்றி கிராமங்களில் சிறிய கடைகளுக்கு விற்று

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே நகை கடை உரிமையாளர் மகனிடம் 300 பவுன் நகையை வழிப்பறி செய்த வழக்கில் மூளையாகச் செயல்பட்ட இரு போலீசார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேந்தர் 58; திருவள்ளூரில் நகை மற்றும் அடகு கடை வைத்துள்ளார். மீட்கப்படாத நகைகளை உருக்கி புதிய நகைகளாக மாற்றி கிராமங்களில் சிறிய
கடைகளுக்கு விற்று வருகிறார்.இம்மாதம் 9ம் தேதி மகேந்தரின் மகன் ஆசிஷ் 25, இவர்களது நகை கடையில் பணியாற்றும் ராஜ்குமார் 52 ஆகியோர் 300 பவுன் நகைகளுடன் ஆட்டோவில் ஸ்ரீபெரும்புதுார் சென்றனர்.

சென்னை - -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மாம்பாக்கம் அருகே மூன்று இருசக்கர வாகனங்களில் முகமூடி அணிந்து வந்த ஆறு பேர் கும்பல் ஆட்டோவை வழிமறித்து கத்தி முனையில் ஆசிஷ் வைத்திருந்த 300 பவுன் நகை பையை பறித்து சென்றது.

ஸ்ரீபெரும்புதுார் போலீசார் விசாரணையில் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடிகள்
ரஞ்சித், ராகுல் தலைமையிலான கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது உறுதியானது. கொள்ளைக்கு மூளையாக இரு போலீசார் செயல்பட்டதும் அம்பலமானது.

கொள்ளை குறித்து போலீசார் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் அருகே ஏகனாபுரத்தைச் சேர்ந்த கதிரவன் 25; மானாமதி போலீஸ் நிலைய காவலர். இவரது நண்பர் சுங்குவார்சத்திரத்தை அடுத்த ராமானுஜபுரத்தைச் சேர்ந்த தமிழரசன் 24; திருக்கழுக்குன்றம் போலீஸ் நிலைய
காவலர்.

இவர்களிடம் மகேந்தரின் கடையில் பணிபுரிந்து ஓராண்டுக்கு முன் நின்றுவிட்ட சந்தோஷ் என்பவர் நண்பராக அறிமுகமாகி உள்ளார். மகேந்தரின் நகை கடையில் இருந்து பாதுகாப்பு இல்லாமல் 15 நாட்களுக்கு ஒரு முறை நகைகள் எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கதிரவன், தமிழரசன் இருவரும் இணைந்து வியாசர்பாடியைச் சேர்ந்த ரவுடி ராகுல் , ரஞ்சித்தை தொடர்பு கொண்டு நகைகளை கொள்ளையடிக்க திட்டம் தீட்டி கொடுத்துள்ளனர்.

தொடர்ந்து ராகுல் , ரஞ்சித் மற்றும் போலீஸ் எஸ்.ஐ. தேர்வில் வெற்றி பெற்று
பணியிடத்திற்காக காத்திருக்கும் மாரி 27 உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து கொள்ளையில்
ஈடுபட்டுள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இந்த வழக்கில் காவலர்கள் தமிழரச,ன் கதிரவன் எஸ்.ஐ. தேர்வில் வெற்றி பெற்ற மாரி, ரவுடிகள் ராகுல், ரஞ்சித் என ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 40 பவுன் நகைகள் 8 லட்சம் ரூபாயை பறிமுதல்
செய்தனர். மற்றவர்களையும் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
24-டிச-202006:46:33 IST Report Abuse
Girija இவங்க என்னிக்காவது முழு நகையை பறிமுதல் செஞ்சதா கணக்கு காட்டியிருக்கங்களா ? என்ன கிரண் ரெட்டி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X