கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மோசடி வழக்கில் கைதான அதிகாரிக்கு நிபந்தனை ஜாமின்

Added : டிச 24, 2020
Share
Advertisement
சென்னை:மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கணேசனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.கடந்த, 2011 - 15ம் ஆண்டில், போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி பதவி வகித்தார். போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப்

சென்னை:மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, மாநகர போக்குவரத்து கழக நிர்வாக
இயக்குனர் கணேசனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது.கடந்த, 2011 - 15ம் ஆண்டில், போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில்பாலாஜி பதவி
வகித்தார்.

போக்குவரத்து துறையில் வேலை பெற்று தருவதாக, 1.62 கோடி ரூபாய் பெற்று மோசடி
செய்ததாக செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் கணேசனை, நவ., 11ல், போலீசார் கைது செய்தனர்.ஜாமின் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கணேசன் மனு தாக்கல் செய்தார். மனுவில், 'சிறையில், 42 நாட்களுக்கும் மேல் உள்ளேன்.

காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு விட்டது' என, கூறப்பட்டது.மனுவை விசாரித்த, நீதிபதி சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு: மனுதாரரிடம் இருந்து முக்கிய ஆவணங்கள், ஏற்கனவே
கைப்பற்றப்பட்டு விட்டன. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபருக்கு, ஏற்கனவே
முன்ஜாமின் வழங்கப்பட்டுள்ளது எனவே, மனுதாரருக்கும் ஜாமின் வழங்கப்படுகிறது.
பாஸ்போர்ட்டை, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X