சென்னை:''பா.ம.க., வன்முறை கட்சி'' என தி.மு.க., எம்.பி. தயாநிதி கூறினார்.
சென்னையில் அவர் கூறியதாவது: பா.ம.க., எப்போதும் வன் முறையை நம்பியிருக்கும் கட்சி. தி.மு.க., பனங்காட்டு நரி என்பதால் இந்த சலசலப்புக்கு அஞ்சாது. கூட்டணிக்காக பா.ம.க., பல கோடி ரூபாய் பேரம் பேசி வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இதை வெளிப் படுத்தினால் தாக்க முயற்சி செய்கிறார்கள்.
கூட்டணிக்காக பணம் வாங்கவில்லை என்றால் அதை மறுக்க ராமதாசும், அன்புமணியும் தயாராக இல்லை. இதுபற்றி என்னோடு விவாதிக்க அவர்கள் தயார் என்றால் நானும் ரெடியாக
இருக்கிறேன்.முதல்வர் பழனி சாமிக்கு மதம் பிடித்து விட்டதால் வாய்க்கு வந்தபடி பேசி கொண்டிருக்கிறார். வரும் தேர்தலில் அவர் தலையில் மக்கள் குட்டு வைத்து அமர வைப்பார்கள்.இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE