உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
அ.யாழினி பர்வதம், சென்னையிலிருந்து எழுதுகிறார்: சமீபத்தில், ஆந்திராவில் இருந்து, சென்னை கோயம்பேடுக்கு, தக்காளி ஏற்றி வந்த லாரி, செங்கல்பட்டு அருகே, அதிகாலை பனி மூட்டத்தில் தடுமாறி, மீடியனில் மோதி கவிழ்ந்தது. விபத்து நிகழ்ந்ததும், அக்கம் பக்கம்
உள்ளோர் மனிதாபிமானத்தோடு, காயம் அடைந்தோரை காப்பாற்றி, சம்பந்தப்பட்டோருக்கு நஷ்டம் ஏற்படாமல் ஆதரவளிப்பது தான், இதுவரை நம் இனத்திற்கு பெருமை சேர்த்து வந்த தமிழ் பண்பாடாகும். ஆனால், செங்கல்பட்டு அருகே நடந்த இந்த விபத்தின் போது, நிகழ்ந்தது என்ன தெரியுமா...

விபத்து செய்தியறிந்து திரண்டு வந்த பொதுமக்கள், கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்து
சிதறிய தக்காளிகளை திருடிச் சென்றனர். அது மட்டுமல்ல, லாரியிலிருந்த டீசலைக் கூட,
'கேன்'களில் பிடித்துச் சென்றனர். விபத்தில் காயமடைந்த ஓட்டுனர் குறித்தோ, போக்குவரத்து பாதித்தது பற்றியோ, அந்த மக்கள் கவலைப்படாதது, வேதனை அளித்தது.இது, ஒரு சோறு பருக்கை உதாரணம். இது போல எண்ணற்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த மக்கள் தான், 2021 பொதுத் தேர்தலில், நல்லாட்சி ஏற்பட ஓட்டளிக்கப் போகின்றனராக்கும்! மக்கள், இந்த
லட்சணத்தில் இருந்தால், ஆட்சியாளர்கள், லஞ்சம் - ஊழலில் திளைத்து சொத்து குவிக்கத் தான் செய்வர்.

அவர்களை தட்டிக் கேட்கும் தகுதி, இந்த மக்களுக்கு இருக்கிறதா? இவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர் மட்டும், யோக்கியனாக இருப்பார் என, எப்படி எதிர்பார்க்க முடியும்? முட்டாள்கள் வாழும் நாட்டில், ஆளத் தெரியாதவர் தான் ஆட்சி நடத்துவர் என்பது, சரியாகத் தான் இருக்கிறது. முதலில் மக்கள் திருந்தினால் தான், சீர்திருத்த அரசியலையும், சிறந்த
தலைமையையும் ஏற்படுத்த முடியும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE