திண்டுக்கல் : கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு வேண்டி பா.ம.க., வினர் பேருராட்சி அலுவலகங்களில் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்காக மாவட்டத்தில் 23 பேரூராட்சி அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்கள் இடம் மனு கொடுக்கும் போராட்டத்தினை பா.ம.க., மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தியது.இதில் தாடிக்கொம்பு பேரூராட்சி அலுவலகம் முன்பாக கிழக்கு மாவட்ட துணை செயலாளர் சோலை ராஜன் தலைமையிலும், அகரம் பேரூராட்சி அலுவலகம் முன்பாக அமைப்புச் செயலாளர் திருப்பதி தலைமையிலும் மனு அளித்தனர். ஒன்றிய செயலாளர் கோபால், நிர்வாகிகள் லட்சுமணன்,ரூபன், விவசாயிகள் சங்க பிரமுகர் நிக்கோலஸ் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.பழநி:
மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமையில் தெற்கு ஒன்றிய செயலாளர் நடராஜ், மகளிரணி நிர்வாகி முத்துலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE