திண்டுக்கல் : கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திண்டுக்கல் பேக்கரிகளில் 'பிளம் கேக்'குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடக்கிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு என்றதும் முதலில் நினைவுக்கு வருவது 'கேக்'தான். இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு 'கேக்'கொடுத்து அன்பை பரிமாறி கொள்வர். இதற்காக, திண்டுக்கல் பேக்கரிகள் 'பிளம் கேக்'குகள் தயாரிக்கும் பணியில் படுபிஸியாக இயங்கி வருகின்றன. உலர் திராட்சை, பேரீச்சை, ப்ரூட்டி, பாதாம், முந்திரி, பிஸ்தா, கோதுமை, சர்க்கரை, வெண்ணெய், நெய் உட்பட 20 வகையான பொருட்களை கலந்து 'பிளம் கேக்'குகள் தயாரிக்கின்றனர்.
நாளை (டிச.25) கிறிஸ்துமஸை முன்னிட்டு கேக் வாங்க, வாடிக்கையாளர்கள் பேக்கரியில் குவிந்து வருகின்றனர். கடந்தாண்டை விட விற்பனை களை கட்டியுள்ளதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.'பேக்கரி பார்' உரிமையாளர் தாமஸ் ரூபன் கூறியது: இதுவரை 2 ஆயிரம் கிலோவுக்கு மேல் பிளம் கேக்குகள் ஆர்டர் வந்துள்ளது. புத்தாண்டு வருவதால் இன்னும் 4 ஆயிரம் கிலோ ஆர்டர் வரும் என எதிர்பார்க்கிறோம். ஒரு கிலோ பிளம் கேக் ரூ.540, வால்நட் கேக் ரூ.560, பனனா கேக் ரூ.500.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஸ்பெஷலாக ேஹாம் மேட் சாக்லேட் ஒரு கிலோ ரூ.800, கிறிஸ்துமஸ் பட்டர் குக்கீஸ் கிலோ ரூ.450 கிடைக்கும். ஆர்டர் கொடுத்தால் ஒரு மணி நேரத்தில் கேக் கிடைக்கும், என்றார். தொடர்புக்கு 99438 82203.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE