சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கழுங்கு அடைத்து நீர் தேக்கியதால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி பாதிப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
சிவகங்கை : காளையார்கோவில் அருகேயுள்ள வல்லக்குளம் கண்மாய் கழுங்கில் நீரை வெளியேற விடாமல் தடுத்து கான்கிரீட்டால் உயர்த்தி அடைத்து வைத்திருப்பதால் விவசாய நிலங்களுக்குள் புகுந்த நீரால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. எம்.வேலாங்குளம் பகுதியில் உதாரப்புளி கிராமத்தினருக்கு சொந்தமான விளை நிலங்கள் வல்லக்குளம் கண்மாய் மேற் பகுதியில் உள்ளது. கனமழையால்

சிவகங்கை : காளையார்கோவில் அருகேயுள்ள வல்லக்குளம் கண்மாய் கழுங்கில் நீரை வெளியேற விடாமல் தடுத்து கான்கிரீட்டால் உயர்த்தி அடைத்து வைத்திருப்பதால் விவசாய நிலங்களுக்குள் புகுந்த நீரால் 50 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

எம்.வேலாங்குளம் பகுதியில் உதாரப்புளி கிராமத்தினருக்கு சொந்தமான விளை நிலங்கள் வல்லக்குளம் கண்மாய் மேற் பகுதியில் உள்ளது. கனமழையால் கண்மாய் நிறைந்துள்ளது. கழுங்கு வழியாக நீர் வெளியேறும் பகுதியில் 2 அடி உயரத்திற்கு கான்கிரீட்டில் கரை போட்டு உயர்த்தியுள்ளனர். மணல் மூடைகளை அடுக்கி கண்மாய் நிறைந்த நீர் வெளியேறாமல் அடைத்து வைத்துள்ளனர். கண்மாய் நீர் பிடிப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ள விளை நிலங்களில் நெற் பயிர் பயிரிடப்பட்டுள்ளது. இந்த வயல்களில் தேங்கிய நீரால் பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் தாசில்தாரிடம் புகார் தெரிவித்தனர்.

அதிகாரிகள் சமாதான கூட்டத்தில் நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இன்று வரை நடவடிக்கை எடுக்கவில்லை. 50 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்து உள்ளது. மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுத்து நிறைந்துள்ள கண்மாய் நீர் கழுங்கு வழியாக வெளியேறி மல்லல் கண்மாய்க்கு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என உதாரப்புளி கிராம மக்கள் கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X