மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான கல்குவாரிகள் உள்ளன. ஒவ்வொன்றும் சராசரியாக குறிப்பிட்ட அளவிற்கு மேல் 200 அடி வரை தோண்டியுள்ளனர்.
இதில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பதே கிடையாது. கொரோனா மற்றும் பல்வேறு காரணங்களால் தற்போது வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அதேநேரம் தொடர் மழை காரணமாக மழைநீர் தேங்கியுள்ளது.இந்நிலையில் பள்ளி, கல்லூரி விடுமுறை என்பதால் பெரும்பாலான இளைஞர்கள், சிறுவர்கள் விளையாட செல்கின்றனர். அப்போது தடுப்புகள் இல்லாத குவாரிகளில் விழுந்து உயிரிழந்து விடுகின்றனர். ஆழம் தெரியாமல் குளிக்கிற சிறுவர்கள் நீரில் மூழ்கியும் உயிரிழக்கின்றனர்.
கல்குவாரிகளில் தவறி விழுதல், எதிர்பாராத விபத்து போன்ற காரணங்களால் வருடம் 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.சமீபத்தில் செட்டிநாயக்கன்பட்டி, நிலக்கோட்டை போன்ற இடங்களில் குவாரியில் விழுந்து 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதுபோல தொடர்ந்து பலியாவது வாடிக்கையாகிவிட்டது. மாவட்ட நிர்வாகம் கல்குவாரிகளில் தடுப்பு அமைத்தும், காவலாளிகளை நியமித்தும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கை எடுகக் வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE