பொது செய்தி

தமிழ்நாடு

மருதங்குடி கண்மாய்க்கு தண்ணீர்

Added : டிச 24, 2020
Share
Advertisement
சிப்காட் : மானாமதுரை மற்றும் காளையார்கோவில் அருகே உள்ள மருதங்குடி கண்மாய்க்கு வல்லக்குளம் கண்மாய் தண்ணீரை கொண்டு செல்ல உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரியையும் வருவாய்த்துறை அதிகாரிகளையும் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மானாமதுரை மற்றும் காளையார்கோவில் அருகே உள்ள வல்லக்குளம் கண்மாய்க்கு நாட்டார் கால்வாயில் இருந்து தண்ணீர் வருகிறது.அதே

சிப்காட் : மானாமதுரை மற்றும் காளையார்கோவில் அருகே உள்ள மருதங்குடி கண்மாய்க்கு வல்லக்குளம் கண்மாய் தண்ணீரை கொண்டு செல்ல உடந்தையாக இருந்த பொதுப்பணித்துறை அதிகாரியையும் வருவாய்த்துறை அதிகாரிகளையும் கண்டித்து விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

மானாமதுரை மற்றும் காளையார்கோவில் அருகே உள்ள வல்லக்குளம் கண்மாய்க்கு நாட்டார் கால்வாயில் இருந்து தண்ணீர் வருகிறது.அதே போன்று அருகில் மருதங்குடி கண்மாய்க்கும் அதே நாட்டார் கால்வாயில் இருந்து வேறு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது.இந்நிலையில் வல்லக்குளம் கண்மாயில் உள்ள தடுப்பணையில் இருந்து மருதங்குடி கண்மாய்க்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள்,வருவாய்த்துறை அதிகாரிகள் உடந்தையுடன் தண்ணீர் கொண்டு சென்றதற்கு வல்லக்குளம்,மல்லல் கிராம விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் இந்த கண்மாயை நம்பி 500 ஏக்கர் பாசனம் உள்ளன.

இந்நிலையில் தண்ணீர் கொண்டு செல்வதில் ஏற்பட்ட பிரச்னையால் காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் வல்லகுளம், மல்லல் கண்மாயில் நீர் நிரம்பிய பிறகு உபரி நீரை மருதங்குடி கிராமத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் மருதங்குடி விவசாயிகள் அந்த ஊரைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள் அதிகாரத்தை பயன்படுத்தி முறைகேடாக தடுப்பணையில் மடையை திறந்தும், மடை வாயிலை சேதப்படுத்தியும் தண்ணீரை கொண்டு சென்றுள்ளனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து மடை வாயிலை அதிகாரிகள் அடைத்தனர். மாவட்ட நிர்வாகத்தினர் இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X