சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிதி நிறுவன மோசடி மூன்று பேர் கைது

Added : டிச 24, 2020
Share
Advertisement
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் நிதிநிறுவன மோசடி தொடர்பாக பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர். இங்கு மெயின்பஜாரில் இயங்கிய உதயநிலா பைனான்ஸ் அண்ட் சிட்ஸ் என்ற நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் அஜிஸ் கொரோனாவில் பலியானார். அதன்பின் சில வாரங்களில் நிறுவனம் மூடப்பட்டது. இதில் பணம் டிபாசிட் செய்திருந்த உத்தமபாளையம் உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த

உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் நிதிநிறுவன மோசடி தொடர்பாக பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

இங்கு மெயின்பஜாரில் இயங்கிய உதயநிலா பைனான்ஸ் அண்ட் சிட்ஸ் என்ற நிதி நிறுவன நிர்வாக இயக்குநர் அஜிஸ் கொரோனாவில் பலியானார். அதன்பின் சில வாரங்களில் நிறுவனம் மூடப்பட்டது. இதில் பணம் டிபாசிட் செய்திருந்த உத்தமபாளையம் உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த நுாற்றுக்கணக்கானவர்கள் திண்டுக்கல் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டிருந்தது முதற்கட்ட விசாரணையில் உறுதியானது. இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி ,13 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

இதில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த நிறுவனத்தின் பங்குதாரர் ஜமாலின் மகன் தர்வேஷ் அக்தர், அவரது மனைவி ரென்சிகாபாத்திமா, மேலாளர் கருப்பசாமி கைது செய்யப்பட்டனர். மோசடி செய்யப்பட்ட பணம் கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களில் பல்வேறு வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். மேல்விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X