புதுச்சேரி; பிப்மேட் தொழில்நுட்ப கல்லுாரி பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இதுகுறித்து புதுச்சேரி அனைத்து அரசு சொசைட்டி கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராம்குமார் விடுத்துள்ள அறிக்கை:ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து, அனைத்து அரசு சொசைட்டி கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தும் அரசாணையை, நிதித்துறை கடந்தாண்டு வெளியிட்டது.இதை தொடர்ந்து, கடந்த 2019 ஆகஸ்ட் முதல் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படியிலான ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், பிப்மேட் தொழில்நுட்பக் கல்லுாரி பேராசிரியர்களுக்கு மட்டும் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி ஊதியம் வழங்காமல், காலம் கடத்தப்பட்டு வருகிறது.எனவே, பிப் மேட் கல்லுாரி பேராசிரியர்களுக்கு நிதித்துறை ஆணையின்படி நிலுவையில் உள்ள ஏழாவது ஊதியக்குழு ஊதியத்தை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE