பொது செய்தி

இந்தியா

தேசிய புத்தகக் கண்காட்சியில் கவியரங்கம் இன்று துவக்கம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
புதுச்சேரி; தேசிய புத்தகக் கண்காட்சியில் இன்றும், நாளையும் கவியரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவையின் தலைவர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கம் சார்பில், 24வது தேசிய புத்தகக் கண்காட்சி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.புத்தகக் கண்காட்சி வளாகத்தில் புதுச்சேரி

புதுச்சேரி; தேசிய புத்தகக் கண்காட்சியில் இன்றும், நாளையும் கவியரங்கத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவையின் தலைவர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரி எழுத்தாளர் புத்தகச் சங்கம் சார்பில், 24வது தேசிய புத்தகக் கண்காட்சி வேல் சொக்கநாதன் திருமண மண்டபத்தில் நடந்து வருகிறது.புத்தகக் கண்காட்சி வளாகத்தில் புதுச்சேரி சிந்தனையாளர்கள் பேரவையும், கவித் தோட்டம் கவிஞர்கள் குழுவும் இணைந்து 2 நாள் கவியரங்கத்துக்கு ஏற்பாடு செய்துள்ளன. மாலை 6:00 மணிக்கு துவங்கி, இரவு 7:00 மணிவரை கவியரங்கம் நடத்தப்படும்.முதல் நாளான இன்று(24ம் தேதி) மாலை, 'தொட்டு விடாதீர் -துார நிற்கவும்' என்ற தலைப்பில் கோரோனா நெறிமுறைகள் பற்றிய விழிப்புணர்வுக் கவிதை அரங்கம் நடக்கிறது. ஜோதி கண் பராமரிப்பு மையத்தின் இயக்குனர் டாக்டர் வனஜா வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.பாரதி நினைவு நுாற்றாண்டு விழா கவியரங்கம், 'இமைப்பொழுதும் சோராதிருத்தல்' என்ற தலைப்பில் நாளை (25ம் தேதி) நடக்கிறது. காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவர் சிவ.மாதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.புதுக்கவிதை 40 வார்த்தைகள் மட்டும், மரபுக் கவிதை 20 வரிகள் மட்டும் இருக்க வேண்டும். பங்கேற்க விரும்புவோர் தேர்வு செய்யும் தலைப்பு மற்றும் தங்களின் பெயர், தொலைபேசி எண்ணை குறிப்பிட்டு கவிஞர் புதுச்சேரி செல்வத்தின் 99945 49572 என்ற 'வாட்ஸ் ஆப்' எண்ணில் இன்று 24ம் தேதி மாலைக்குள் பதிய வேண்டும்.ஒருவர் இரண்டு கவியரங்கங்களிலும் பங்கேற்கலாம். சான்றிதழ் வழங்கப்படும்.இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X