பொது செய்தி

இந்தியா

தண்டு துளைப்பானை கட்டுப்படுத்த செயல்விளக்கம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
நெட்டப்பாக்கம்; இயற்கை முறையில் நெல்லில் ஏற்படும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் செயல்விளக்க முகாம் கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லண்டன் ரீடிங் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த முகாமிற்கு, பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் தீபா, சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ரங்கலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.காமராஜர் வேளாண் அறிவியல்

நெட்டப்பாக்கம்; இயற்கை முறையில் நெல்லில் ஏற்படும் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் செயல்விளக்க முகாம் கரிக்கலாம்பாக்கத்தில் நடந்தது.சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் லண்டன் ரீடிங் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த முகாமிற்கு, பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர் தீபா, சாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ரங்கலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர்.காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய இயக்குனர் விஜயகுமார் முன்னிலையில், காரைக்கால் ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லுாரி மாணவர்கள் இயற்கை முறையில் தண்டு துளைப்பானை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினர்.இதுகுறித்து ரங்கலட்சுமி கூறுகையில், நெற்பயிரில் அதிக சேதத்தை விளைவித்து மகசூலை குறைப்பது மஞ்சள் தண்டு துளைப்பான் பூச்சி. இதனை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் புதுச்சேரியில் ஆராய்ச்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X