மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.325 கோடியில் ஒருங்கிணைந்த ஆப்பரேஷன் தியேட்டர் கட்டப்படுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு பிறகு முதற்கட்ட பணிகள் துவங்கியுள்ளன.
இங்கு 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதி உள்ளது. தினசரி 7 ஆயிரம் வெளி நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். 40 பிரசவங்கள் நடக்கின்றன. ஆனால் மக்கள் தொகை உயர்விற்கு ஏற்ப இங்கு ஆப்பரேஷன் தியேட்டர் வசதிகள் மேம்படுத்தப்படவில்லை. இக்குறையை போக்க 2016ல் ரூ.325 கோடியில் ஒரு திட்டத்தை மாநில அரசு அறிவித்தது. நவீன வசதிகளுடன் ஒரே இடத்தில் 24 ஆபரேஷன் தியேட்டர்களை நிறுவுவது தான் திட்ட சாராம்சம். நிதியை ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (ஜிக்கா) கடனாக வழங்குகிறது.
ஒருங்கிணைந்த ஆப்பரேஷன் தியேட்டருக்கான இடம் தேர்வு செய்வதிலேயே சில ஆண்டுகள் உருண்டன. ஒரு வழியாக டீன் அறை அருகே வாகன நிறுத்தும் இடம், கண், தோல், இருதய புறநோயாளிகள் பிரிவு அமைந்திருக்கும் பகுதி தேர்வு செய்யப்பட்டது. இக்கட்டடங்களை இடித்துவிட்டு மாற்று இடம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மண் பரிசோதனை, உள்ளூர் திட்டக்குழும அனுமதி தயாரான பிறகும் தாமதம் நிலவியது.
துணை இயக்குனர் ஆலோசனைஇதை துரிதப்படுத்த மருத்துவமனை தரப்பு, பொதுப்பணித்துறை அதிகாரிகள் தரப்பினருடன் மருத்துவக் கல்வி துணை இயக்குனர் சபீதா நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் உடனடியாக பணியை மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ஒருங்கிணைந்த ஆப்பரேஷன் தியேட்டருக்காக பழயை கட்டட இடிப்பு பணி துவங்க உள்ளது. இங்குள்ள பிரிவுகள் வேறு இடத்திற்கு மாற்றும் பணி 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. புத்தாண்டுக்குள் 100 சதவீதம் முடிந்துவிடும்.
ஜிக்கா தரும் கடனில் ஆப்பரேஷன் தியேட்டர் கட்ட 150 கோடி ரூபாய், நவீன சிகிச்சை உபகரணங்கள் வாங்க 175 கோடி ரூபாய் செலவிடப்படும். பொது, பிளாஸ்டிக் சர்ஜரி, காது மூக்கு தொண்டை, ரத்தநாளம், இருதயவியல் ஆகிய துறை சார்ந்த 24 ஆப்பரேஷன் தியேட்டர்கள் ஒரே இடத்தில் நிறுவப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE