நெல்லிக்குப்பம்; நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவமனையில் பிரசவ வார்டு அருகே பெரிய அரச மரம் வளர்ந்துள்ளதால் கட்டடம் இடிந்து விழும் அபாயம் உள்ளது.நெல்லிக்குப்பம் நகராட்சி மருத்துவ மனையில் பிரசவ வார்டுக்கு தனியாக கட்டடம் உள்ளது. இந்த இடத்தின் அருகில் வட்டார வள மையம் கட்டடம் உள்ளது. பிரசவ வார்டுக்கு அருகே பல ஆண்டு பழமையான அரச மரம் வளர்ந்துள்ளது. இதனால் பிரசவ வார்டு கட்டடமும் வட்டார வள மையம் கட்டடமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது.மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அச்சத்துடனேயே வந்து செல்லும் நிலை உள்ளது. அந்த மரம் சிறியதாக இருந்த போதே மருத்துவமனை மற்றும் வட்டார வள மையம் ஊழியர்கள் அகற்றாமல் அலட்சியமாக இருந்ததால் பெரிய அளவில் மரம் வளர்ந்து கட்டடத்தையே பாழாக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.மழை காலத்தில் காற்றில் மரம் உடைந்து பெரிய விபத்து ஏற்படுவதற்குள் மரத்தை அகற்ற வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE