சேத்தியாத்தோப்பு; பா.ம.க., வினர் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ஊர்வலமாக சென்று சேத்தியாத்தோப்பு பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.சேத்தியாத்தோப்பு ராஜீவ் சிலை அருகிலிருந்து பா.ம.க., வன்னியர் சங்க நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் பேரூராட்சி அலுவலகத்திற்கு ஊர்வலமாக சென்று வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கோரி மனு அளித்தனர்.நிகழ்ச்சிக்கு வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் செல்வராசு தலைமை தாங்கினார். பா.ம.க., மூத்த நிர்வாகிகள் வீரசோழன், பன்னீர், மகளிரணி கலைமதி, நகர செயலாளர் ஜெய்சங்கர், முன்னாள் நகர செயலாளர் வீரப்பன், ஒன்றிய செயலாளர்கள் சரண்ராஜ், மணியரசன், மோகன், சங்கர், வைத்தி, வீரவடிவேல், பரம ராஜா, ஊடக பிரிவு விஷ்ணு, கார்த்தி, பூவரசன், குப்புசாமி முன்னிலை வகித்தனர். நகர தலைவர் கலைமணி வரவேற்றார்.இதில் தர்மராஜ், சம்பத், மலரவன், கீரப்பாளையம் ஒன்றிய வன்னியர் சங்க தலைவர் முருகானந்தம், விஜயபாரதி, அஜித், முகிலன், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE