தொ.மு.ச.,முதன்மை சங்கமாக கொண்டு வர நிர்வாகிகள் பாடுபட உதயநிதி வேண்டுகோள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொ.மு.ச.,முதன்மை சங்கமாக கொண்டு வர நிர்வாகிகள் பாடுபட உதயநிதி வேண்டுகோள்

Added : டிச 24, 2020
Share
நெய்வேலி; தொ.மு.ச.,வை முதன்மை சங்கமாக கொண்டுவர பாடுபட வேண்டும் என நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார்.நெய்வேலி நகரில் தி.மு.க.,இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' நிகழ்ச்சி நடந்தது.சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். என்.எல்.சி., தொ.மு.ச., தலைவர் வீர ராமச்சந்திரன்,

நெய்வேலி; தொ.மு.ச.,வை முதன்மை சங்கமாக கொண்டுவர பாடுபட வேண்டும் என நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் தி.மு.க., இளைஞரணி செயலாளர் உதயநிதி பேசினார்.நெய்வேலி நகரில் தி.மு.க.,இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' நிகழ்ச்சி நடந்தது.சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். என்.எல்.சி., தொ.மு.ச., தலைவர் வீர ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் சுகுமார், பொருளாளர் குருநாதன், அலுவலக செயலாளர் பாரி முன்னிலை வகித்தனர்.பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர்கணேசன், ரமேஷ் எம்.பி., முதன்மை உரையாற்றினர்.முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலைஅணிவித்து உதயநிதி பேசுகையில், எனது பிரசார கூட்டங்களை தடுக்க போலீசார் என்னை கைது செய்து மிரட்டிபார்த்தனர்.நான் கருணாநிதியின் பேரன். இந்த மிரட்டலுக்கெல்லாம் பயப்பட மாட்டேன். தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு விடுவதில்லை. இதனால் தமிழகத்தின் உரிமைகள்பறிக்கப்படுகிறது, என்றார். முன்னதாக, என்.எல்.சி., தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த நிர்வாகிகள் 10 பேருக்கு பொன்னாடை போர்த்திகவுரவித்தார். என்.எல்.சி.,2ம் அனல் மின் நிலையத்தில் நடந்த தீ விபத்தில் இறந்த 21 தொழிலாளர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் பேசுகையில், என்.எல்.சி.,நிறுவனம் துவங்கியதிலிருந்து தொ.மு.ச., மட்டுமே முதன்மைசங்கமாக திகழ்கிறது. விரைவில் நடக்கவுள்ள ரகசிய ஓட்டெடுப்பில் கட்சி நிர்வாகிகள் தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளைமறந்து மீண்டும் தொ.மு.ச.,வை முதன்மை சங்கமாக கொண்டுவர பாடுபட வேண்டும். இந்த வெற்றி தான் 2021 தேர்தலுக்கானமுன்னோட்டமாக அமைய வேண்டும், என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X