கடலுார்; அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட மாநில அளவிலான மதிப்பெண் தரவரிசை பட்டியலில், கடலுார் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லுாரி மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.கல்லுாரி முதுகலை கணினி பயன்பாட்டியல் (எம்.சி.ஏ.,) துறையை சேர்ந்த சத்யா 9:30 புள்ளிகளை பெற்று தரவரிசை பட்டியலில் 5ம் இடத்தையும், விஜயஸ்ரீ 9.05 புள்ளிகளை பெற்று 20 ம் இடத்தையும் பிடித்துள்ளனர்.இளங்கலை கம்ப்யூட்டர் (பி.இ. சி.எஸ்.இ.,) துறையை சேர்ந்த மாணவி பாஹிமா 8.90 புள்ளிகள் பெற்று கம்ப்யூட்டர் பொறியியல் பிரிவில் மாநிலத்தில் 20ம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.சாதனை மாணவிகளை கல்லுாரி தாளாளர் டாக்டர் ராஜேந்திரன், செயலாளர் விஜயகுமார், முதல்வர் இளங்கோ, கல்லுாரி நிர்வாக அதிகாரி பாலகிருஷ்ணன் உட்பட அனைத்து துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE