ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்தில் எஸ்.பி.,ஸ்ரீஅபிநவ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலையத்திற்கு எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் நேற்று வந்தார். போலீஸ் நிலைய கோப்புகளை பார்வையிட்டு, போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். கம்ப்யூட்டர், பிரிண்டர் உள்ளிட்ட சாதனங்கள் சரியாக உள்ளதா என கேட்டறிந்தார்.பின்னர் அவர் கூறுகையில், மாவட்டத்தில் இந்த ஆண்டு 85 சதவீத திருட்டு வழக்குகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் அண்ணாமலை நகர், மற்றும் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் நடந்த இரண்டு திருட்டு வழக்குகளில் குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு நகைகள் மீட்கப்பட்டுள்ளது. ஸ்ரீமுஷ்ணம் போலீஸ் நிலைய வளாகத்தில் பாழடைந்த நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்றிவிட்டு புதிய குடியிருப்புகள் விரைவில் கட்டப்படும், என்றார்.வாலீஸ்பேட்டை சின்னப்பராஜ் குடும்பத்தினர் வீட்டில்நடந்த திருட்டு சம்பவத்தில் குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து நகைகளை மீட்டதற்கு எஸ்.பி.,யை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.போலீஸ் நிலைய வளாகத்தில் மரக்கன்று நட்டார். சேத்தியாதோப்பு டி.எஸ்.பி. சுந்தரம், இன்ஸ்பெக்டர் வினதா, சப் இன்ஸ்பெக்டர்கள் வைத்தியநாதன், சேகர், சோழத்தரம் சப் இன்ஸ்பெக்டர் இளையராஜா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE