பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய கிரைம் ரவுண்ட்அப்

Updated : டிச 24, 2020 | Added : டிச 24, 2020
Share
Advertisement
1. புவனகிரி; புவனகிரி அருகே முன்விரோதத்தில் வாலிபரை திட்டி, தாக்கி இடது கை கட்டைவிரலை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.2. நிதி நிறுவன மோசடி மூன்று பேர் கைதுஉத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் நிதிநிறுவன மோசடி தொடர்பாக பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.3. 12 பவுன் நகை திருட்டுகம்பம் : கம்பம் நந்தனார் காலனியில் குடியிருப்பவர் லோகநாதன். இவர் குடும்பத்தினருடன்

1. புவனகிரி; புவனகிரி அருகே முன்விரோதத்தில் வாலிபரை திட்டி, தாக்கி இடது கை கட்டைவிரலை வெட்டியவரை போலீசார் தேடி வருகின்றனர்.



latest tamil news




2. நிதி நிறுவன மோசடி மூன்று பேர் கைது
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் நிதிநிறுவன மோசடி தொடர்பாக பெண் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

3. 12 பவுன் நகை திருட்டு
கம்பம் : கம்பம் நந்தனார் காலனியில் குடியிருப்பவர் லோகநாதன். இவர் குடும்பத்தினருடன் வெளியூர் சென்றபோது வீட்டின் கதவை உடைத்த மர்மநபர்கள் 12 பவுன்தங்க நகைகளை திருடிச்சென்றனர். கம்பம் தெற்கு இன்ஸ்பெக்டர் கீதா விசாரிக்கின்றார்.

4. 300 பவுன் நகை வழிப்பறியில் திருப்பம்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே நகை கடை உரிமையாளர் மகனிடம் 300 பவுன் நகையை வழிப்பறி செய்த வழக்கில் மூளையாகச் செயல்பட்ட இரு போலீசார் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

5. நகை சீட்டில், ரூ.3.50 கோடி மோசடி; கடை உரிமையாளர் மீது வழக்கு

திருப்பூர் : தாராபுரத்தில், நகை சீட்டு நடத்தி, ரூ.3.50 கோடியை மோசடி செய்தது தொடர்பாக, கடை உரிமையாளர் மீது மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


latest tamil news




இந்தியாவில் குற்ற சம்பவம் :-



01. ரூ.6,300 கோடி மோசடி: மூவர் கைது

புதுடில்லி: வீட்டுமனை, விவசாய பண்ணை மற்றும் முதலீடுகளுக்கு கூடுதல் வட்டி தருவதாக கூறி, 32 லட்சம் பேரிடம், 'அக்ரி கோல்ட்' நிறுவனம், 6,300 கோடி ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளது.இந்த வழக்கில், அந்நிறுவன உரிமையாளர்கள் அவ்வா வெங்கடராம ராவ், அவ்வா வெங்கட்டா நாராயண ராவ் மற்றும் அவ்வா ஹேமசுந்தரவரா பிரசாத் ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.


latest tamil news





உலக நடப்பு



பயங்கரவாத தாக்குதல்: 3 பேர் பலி

காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்கு அருகே, நேற்று குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. அதேசமயம், சில பயங்கரவாதிகள், துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், அரசு சாரா தேர்தல் கண்காணிப்பு குழுவின் தலைவர் ஒருவர் உட்பட, மூன்று பேர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X