ரிஷிவந்தியம்; மேலப்பழங்கூரில் தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்க துணைத் தலைவர் சின்னராஜ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கத் தலைவர் தேவசந்திரன் முன்னிலை வகித்தனர். மேலப்பழங்கூர் உதவி டாக்டர் வினோதினி வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளராக அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் அருணகிரி, 150 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க துணைத் தலைவர் மாரிமுத்து, நிர்வாகிகள் ஸ்ரீராம், பாலமுருகன், குமார், விஜயமணி, ஜெயக்குமார், சேகர் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE