தமிழ்நாடு

தேவை: கச்சிராயபாளையத்தில் வார சந்தைக்கு இடம்...விவசாயிகள், பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : டிச 24, 2020
Share
Advertisement
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையத்தில் வார சந்தை வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையத்தில் புதன்கிழமை தோறும் காய்கறிகள், மளிகை விற்பனை செய்யும் வார சந்தை நடைபெற்று வருகிறது.கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் தங்கள்

கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையத்தில் வார சந்தை வளாகம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கனந்தல் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிராயபாளையம் புதிய பஸ் நிலையத்தில் புதன்கிழமை தோறும் காய்கறிகள், மளிகை விற்பனை செய்யும் வார சந்தை நடைபெற்று வருகிறது.கச்சிராயபாளையம் பகுதி விவசாயிகள் தங்கள் வயல்களில்விளைந்த காய்கறிகளைக் கொண்டு வந்து விற்பனை செய்வது வழக்கம்.ஆனால், வார சந்தைக்கென தனி இடம் இல்லாததால், பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் சந்தை நடைபெறுகிறது.

இதனால், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைகின்றனர்.குறிப்பாக மழைக் காலங்களில் மழையில் நனைந்தபடி வியாபாரம் செய்யும் அவலம் உள்ளது. மேலும், மழை நாட்களில் அப்பகுதியில் வெளியேறும் கழிவு நீரும்கலந்து பஸ் நிலைய பகுதிகளில் வெளியேறுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.இதனால், மழைக்காலங்களில் பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் திரும்ப எடுத்துச் செல்லும் அவலம் உள்ளது.இதனால் விவசாயிகள் நஷ்டம் அடைகின்றனர். வார சந்தை நடத்த பேரூராட்சி மூலம் லட்சக் கணக்கான ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டு, சந்தையில் கடைகள் வைக்க குத்தகைதாரர்கள் வாடகை வசூல் செய்கின்றனர்.ஆனால், சந்தைக்கென முறையான இடம் இல்லாமலும், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையும் உள்ளது.

மேலும், வார சந்தை புதிய பஸ் நிலையத்தில் நடைபெறுவதால் புதன்கிழமை தோறும் கச்சிராயபாளையம் பகுதியில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.எனவே, கச்சிராயபாளையம் பகுதியில் வார சந்தை வளாகம் அமைக்க முறையான இடத்தை தேர்வு செய்ய பேரூராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X