சங்கராபுரம்; சங்கராபுரம் மற்றும் திருநாவலுார் அருகே குட்கா விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ராமர், பூட்டை கிராமத்தில் உள்ள கடைகளில் சோதனை மேற்கொண்டார்.அப்போது, கடையில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ரவியை, 43; கைது செய்து 10 ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.உளுந்துார்பேட்டைதிருநாவலுார் அருகே சப் இன்ஸ்பெக்டர்கள் குருபரன், பாலமுரளி மற்றும் போலீசார் சேந்தநாடு கடைவீதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடைகளில் குட்கா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணி, 55; ரமேஷ், 40; கவிராஜ், 33; மடப்பட்டு ராஜேந்திரன், 32; ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE