பொது செய்தி

தமிழ்நாடு

இட ஒதுக்கீடு கோரி பா.ம.க., பேரூராட்சி அலுவலகங்களில் மனு

Added : டிச 24, 2020
Share
Advertisement
விழுப்புரம்; வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி விழுப்புரம் மாவட்டத்தில் பேரூராட்சி அலுவலகங்களில் பா.ம.க., வினர் மனு அளித்தனர்.வளவனுாரில் மாவட்ட துணைத் தலைவர் பூராசாமி தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரையிடம் மனுவை அளித்தனர். இதில், மணிமாறன், சிவக்குமார், ராஜபிரபு, வெங்கடேசன் உள்ளிட்டோர்

விழுப்புரம்; வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரி விழுப்புரம் மாவட்டத்தில் பேரூராட்சி அலுவலகங்களில் பா.ம.க., வினர் மனு அளித்தனர்.வளவனுாரில் மாவட்ட துணைத் தலைவர் பூராசாமி தலைமையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து, பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரையிடம் மனுவை அளித்தனர். இதில், மணிமாறன், சிவக்குமார், ராஜபிரபு, வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.திருவெண்ணெய்நல்லுார்நகர செயலாளர் சுதாகர் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில துணைப் பொதுச் செயலாளர் அன்பழகன், மாநில துணைப் பொதுச்செயலாளர் தங்கஜோதி உள்ளிட்டோர் பேரூராட்சியில் மனு கொடுத்தனர். நிர்வாகிகள் துரை சுப்பிரமணியன் முத்து மகாலிங்கம், கோபி, சந்தோஷ், சிவராமன் ஆகியோர் பங்கேற்றனர்.விக்கிரவாண்டிவிக்கிரவாண்டியில் மாநில துணைத்தலைவர் அரிகரன் தலைமையில் வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் அன்புமணி, மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவக்குமார், மாநில துணை அமைப்பு செயலாளர் பழனிவேல் மத்திய மாவட்ட செயலாளர் புகழேந்தி ஆகியோர் மனு கொடுத்த னர்.மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் புண்ணியகோடி. சீனுவாசன், பெருமாள், லட்சுமி நாராயணன், அரிகிருஷ்ணன், அருள், விஜயன்,ராஜா, செங்கேணி, தமிழ்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்செஞ்சிசெஞ்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, தீரன் தலைமையில், மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கனல் பெருமாள், முன்னாள் சேர்மன் அன்பழகன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் மணிமாறன், சுப்பிரமணியன், மாநில துணைத் தலைவர் வெங்கடாஜலம், வழக்கறிஞர் கலியமூர்த்தி, மாவட்ட துணைச்செயலாளர்கள் அய்யனார், ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர்மாலா சிவக்குமார், ஒன்றிய செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X