ஆர்.கே.பேட்டை; நவரத்தினங்களை தெருக்களின் பெயராக கொண்டுள்ள சமத்துவபுரத்தில், தற்போது பெயர் பலகையில் உள்ள எழுத்துக்கள் அழிந்துவிட்டன. இதனால், முகவரி தேடி வரும் புதிய நபர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.ஆர்.கே.பேட்டை ஒன்றியம், சந்தான வேணுகோபாலபுரம் ஊராட்சியில், சமத்துவபுரம் உள்ளது. இதில், நவரத்தினங்களின் பெயரில், தெருக்கள் உள்ளன.பல ஆண்டுகளாக, இந்த பெயர் பலகையை புதுப்பிக்காததால், அதில் உள்ள எழுத்துக்கள் அழிந்துவிட்டன. இதனால், சமத்துவபுரத்திற்கு வரும் தபால்காரர் உட்பட புதிய நபர்கள், முகவரி தேடி சிரமப்படுகின்றனர்.தற்போது, இந்த பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் ஏற்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியாக உருவெடுத்துவரும் சமத்துவபுரத்தில், தெரு பெயர் பலகைகளை புதுப்பிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE