திருவள்ளூர் - திருவள்ளூர் மாவட்டத்தில், 53 'மினி கிளினிக்' துவக்கப்பட உள்ளது.தமிழகம் முழுதும், மினி கிளினிக்கினை, முதல்வர் இ.பி.எஸ்., துவக்கி உள்ளார். இந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில், மினி கிளினிக் துவக்க விழா, வில்லிவாக்கம் மற்றும் பூந்தமல்லி ஒன்றியத்தில், மொத்தம், 17 இடங்களில், ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின், கலெக்டர் பொன்னையா ஆகியோர் துவக்கி வைத்தனர்.பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை சார்பாக, மினி கிளினிக் துவக்கப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில், 53 மினி கிளினிக்குள் துவக்கப்பட உள்ளது. இவை, சனிக்கிழமை தவிர்த்து, வாரத்தின், ஆறு நாட்களில், காலை, 8:00 மணி முதல், பகல், 12:00 மணி; மாலை, 4:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை செயல்படும்.இவற்றில், தலா, ஒரு மருத்துவ அலுவலர், செவிலியர் மற்றும் மருத்துவ உதவியாளர் இருப்பர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE