பொது செய்தி

தமிழ்நாடு

தற்காலிக தரைப்பாலம் சீரமைப்பு பணி துவக்கம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
ஊத்துக்கோட்டை - ஆரணி ஆற்றின் மேல், 28 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. போக்குவரத்திற்காக அமைத்த தற்காலிக தரைப்பாலம், 'நிவர், புரெவி' புயல்களால் பெய்த கன மழையால், இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.கடந்த, 25ம் தேதி முதல், போக்குவரத்து முடங்கியதால், அனந்தேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், பெரிஞ்சேரி, உள்ளிட்ட,

ஊத்துக்கோட்டை - ஆரணி ஆற்றின் மேல், 28 கோடி ரூபாய் மதிப்பில், பாலம் அமைக்கும் பணி, இரண்டு ஆண்டுகளாக நடந்து வருகிறது. போக்குவரத்திற்காக அமைத்த தற்காலிக தரைப்பாலம், 'நிவர், புரெவி' புயல்களால் பெய்த கன மழையால், இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டது.கடந்த, 25ம் தேதி முதல், போக்குவரத்து முடங்கியதால், அனந்தேரி, போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம், மாம்பாக்கம், பெரிஞ்சேரி, உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.பொதுமக்கள் வேலை, அத்தியாவசியத் தேவைகளுக்கு, 40 கி.மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டி உள்ளது.தரைப்பாலம் சீரமைக்கும் பணி தாமதம் ஆனதால், அதிருப்தி அடைந்த ஊத்துக்கோட்டை வணிகர் சங்கத்தினர், 22ம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்தனர்.இதையடுத்து, 21ம் தேதி மாலை, திருவள்ளூர் கோட்டாட்சியர் ப்ரீத்தி பார்கவி தலைமையில், தாசில்தார் தேவி, டி.எஸ்.பி.,சாரதி, தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் சிவகுமார், போலீஸ் ஆய்வாளர் குமார் மற்றும் வணிகர் சங்கத்தினர் பங்கேற்ற சமரச பேச்சு, தாலுகா அலுவலகத்தில் நடந்தது.இதில், வரும், 25ம் தேதிக்குள், தற்காலிக தரைப்பாலம் சீரமைக்கப்படும் என, அதிகாரிகள் உறுதி அளித்தனர். கடையடைப்பு போராட்டம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை, உடைந்த தற்காலிக பாலம் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X