பொது செய்தி

தமிழ்நாடு

ஆண்டார்மடத்தில் தற்காலிக பாதை அமைப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
பொன்னேரி - கிராமங்களை சூழ்ந்த ஆற்று நீரை வெளியேற்றுவதற்காக, துண்டிக்கப்பட்ட ஆண்டார்மடம்- - பழவேற்காடு சாலையில், தற்காலிக பாதை அமைக்கப்பட்டு உள்ளது.கடந்த மாதம், ஆரணி ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.ஆண்டார்மடம்- - பழவேற்காடு சாலையில் இருந்து, சிறுபாலத்தின் வழியாக, அதிகப்படியான ஆற்று நீர்

பொன்னேரி - கிராமங்களை சூழ்ந்த ஆற்று நீரை வெளியேற்றுவதற்காக, துண்டிக்கப்பட்ட ஆண்டார்மடம்- - பழவேற்காடு சாலையில், தற்காலிக பாதை அமைக்கப்பட்டு உள்ளது.கடந்த மாதம், ஆரணி ஆற்றில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பொன்னேரி அடுத்த, ஆண்டார்மடம், சிறுபழவேற்காடு கிராமங்களை தண்ணீர் சூழ்ந்தது.ஆண்டார்மடம்- - பழவேற்காடு சாலையில் இருந்து, சிறுபாலத்தின் வழியாக, அதிகப்படியான ஆற்று நீர் செல்ல முடியாத நிலையில், மேற்கண்ட கிராமங்களை சூழ்ந்தது.அதை தொடர்ந்து, பொதுப்பணித் துறையினர் மேற்கண்ட சிறுபாலத்தின் அருகிலேயே சாலையை, 30 மீட்டர் நீளத்திற்கு வெட்டி ஆற்று நீர் சீராக செல்ல நடவடிக்கை எடுத்தனர். இதனால், ஆண்டார்மடம் -- -பழவேற்காடு சாலையில், போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது.தற்போது, ஆற்றில் நீர்வரத்து குறைந்து உள்ளதால், மணல் மூட்டைகள் போட்டு தண்ணீரை தடுக்கப்பட்டு, ஏற்கனவே இருந்த சிறுபாலத்தின் வழியாக செல்கிறது.துண்டிக்கப்பட்ட சாலை மண் போட்டு தற்காலிக பாதை அமைக்கப்பட்டு உள்ளது. 25 நாட்களுக்கு பின், வாகனங்கள் அந்த சாலை வழியாக சென்று வருகின்றன.இது குறித்து பொதுப்பணித் துறை உதவி பொறியாளர் கண்ணன் தெரிவித்தாவது:ஆற்று நீர் சீராக செல்வதற்காக துண்டிக்கப்பட்ட இடத்தில், 10 மீட்டர் நீளத்திற்கு, தரைப்பாலம் அமைக்கப்பட உள்ளது.அதற்கான பணிகள் ஒரிரு நாளில் துவங்க உள்ளோம். ஒரு வாரத்தில் அங்கு பாலம் அமைக்கப்பட்டு, போக்குவரத்து தடையின்றி நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X