திருத்தணி - அரசு மருத்துவமனையில், தேசிய ஆய்வாளர்கள், நேரில் வந்து தரம் குறித்து ஆய்வு செய்தனர்.திருத்தணி அரசு மருத்துவமனைக்கு, வரும் பிப்ரவரி மாதத்தில், டில்லியில் இருந்து தேசிய சுகாதார குழுவினர் வருகை தருகின்றனர்.இக்குழு அளிக்கும் தரச் சான்றால், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு ஆண்டுக்கு, 20 லட்சம் ரூபாய், மத்திய அரசு ஊக்கத்தொகை வழங்கும்.இந்நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துவதற்கு தமிழக அரசு, 1.02 கோடி ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது, அரசு மருத்துவமனையின் தரம் எவ்வாறு உள்ளது என, ஆய்வு செய்வதற்காக தேசிய ஆய்வாளர்கள், திருவள்ளூர் மாவட்ட குடும்ப நல இணை இயக்குனர் எம்.ஏ.,இளங்கோவன், சோளிங்கர் அரசு மருத்துவ அலுவலர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் நேற்று திருத்தணிக்கு வந்தனர்.இவர்கள், மருத்துவமனை முழுதும் ஆய்வு செய்தனர். மேலும், அவசர சிகிச்சை பிரிவு, ரத்தப் பரிசோதனை மையம் ஆகிய இடங்களுக்கு சென்று அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து தலைமை மருத்துவர் சீ.ராதிகாதேவியிடம் கூறி விளக்கினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE