பொது செய்தி

தமிழ்நாடு

கார்களில் 'பம்பர்' பொருத்திய 10 வாகனங்களுக்கு அபராதம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
திருத்தணி - அரசு உத்தரவை மீறி, 'புல்பார்' பொருத்திய, 10 கார்களுக்கு, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்துள்ளார்.சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை ஆணையர் முத்து உத்தரவின்படி, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி ஆகியோர் நேற்று திருத்தணி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, புல்பார் பம்பர் பொருத்தி

திருத்தணி - அரசு உத்தரவை மீறி, 'புல்பார்' பொருத்திய, 10 கார்களுக்கு, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அபராதம் விதித்துள்ளார்.சென்னை வடக்கு சரக போக்குவரத்து இணை ஆணையர் முத்து உத்தரவின்படி, திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலர் மோகன், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி ஆகியோர் நேற்று திருத்தணி பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.அப்போது, புல்பார் பம்பர் பொருத்தி வந்த 10 வாகனங்களை பிடித்து அபராதம் விதித்தார். மேலும், வாகன ஓட்டிகளிடம் பம்பர் வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என, ஆய்வாளர் எச்சரித்து அனுப்பினர்.இது குறித்து, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் லீலாவதி கூறியதாவது:நான்கு சக்கர வாகனங்களில், முன்பகுதியில், புல்பார் பொருத்தினால் விபத்து நேரிடும் போது வாகனத்தில் பயணிப்பவர்கள், வாகனமும் அதிகளவில் சேதம் அடைகிறது.இதனால், பம்பர்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. கார்களில், பம்பர் பொருத்தக்கூடாது. மீறிபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X