பஸ் மோதி வாலிபர் பலிநகரி: சித்துார் மாவட்டம், வரதய்யபாளையம் காலனியைச் சேர்ந்தவர்கள் புருஷோத்தமன், 19, நவீன்குமார், 20, சித்தைய்யா, 14. இவர்கள் மூவரும், ஒரே இருசக்கர வாகனத்தில், பி.என்.கண்டிகை அடுத்த, கஞ்சனபுத்துார் கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து வீட்டிற்கு திரும்பி வந்துக் கொண்டிருந்தனர்.அப்போது, எதிரே வந்த தமிழக அரசு பஸ் மோதியதில், மூவரும் படுகாயமடைந்தனர். இவர்களை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, புருஷோத்தமன் இறந்தார். பி.என்.கண்டிகை போலீசார் விசாரிக்கின்றனர்.2 மாடுகள் பலிநகரி: சித்துார் மாவட்டம், தொட்டம்பேடு அடுத்த, பில்லமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியம், 40. இவர், நேற்று முன்தினம், தன் காளை மாடுகளை கொண்டராஜூப்பள்ளி கிராமத்திற்கு ஓட்டிச் சென்று, விவசாய நிலத்தில் ஏர் உழுதுக் கொண்டிருந்தார்.அங்கு சாலையோரம் இருந்த மின் மாற்றின் அருகே செல்லும் மின்ஒயர் காளை மாடுகள் மீது பட்டதில், இரண்டு மாடுகளும் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தன.கால்வாயில் மூழ்கி ஒருவர் பலிநகரி: சித்துார் மாவட்டம், தொட்டம்பேடு அடுத்த, கள்ளிப்பூடி கிராமம் அருகே, தெலுங்கு கங்கை கால்வாயில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து, தொட்டம்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டனர். இறந்தவர் கருப்பு வேட்டியும், கருப்பு துண்டும் அணிந்திருந்தனர்.அய்யப்ப பக்தர் கால்வாயில் குளிக்க சென்ற போது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என, போலீசார் சந்தேகம் அடைந்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE