மாமல்லபுரம் - மாமல்லபுரத்தில், கோவில் திருக்குளத்தை, துார் வாரி மேம்படுத்த, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரத்தில், தமிழக ஹிந்து சமய அறநிலைய துறையின்கீழ், ஸ்தலசயன பெருமாள் கோவில் உள்ளது. இதன், புனித தீர்த்தம், புண்டரீக புஷ்கரணி திருக்குளம். பக்தர்கள், கடலில், குளத்தில் நீராடியே, கோவிலில் வழிபட வேண்டும். புனித நீராட பயன்பட வேண்டிய குளம், துார்ந்து சீரழிந்துள்ளது. இரு ஏக்கர் பரப்புள்ள குளம், பல ஆண்டுகளுக்கு முன், மணற்பரப்புடன் அமைந்து, எப்போதும் நீர் சுரக்கும். பாறைக்குன்று பகுதி மழைநீரும், குளத்தையே அடைந்து, குளம் வற்றாது.குளத்தை, நீண்டகாலம் துார் வாரப்படாமல், சேறு அதிகரித்தது. நீரூற்றும் சுரப்பதில்லை. சுற்றுப்புறம் கட்டடங்கள் பெருகி, நீர்வரத்து பாதைகள் அடைந்து, மழை நீர் வரத்து தடைபட்டது.குளத்தில், மழை நீர், சில மாதங்களுக்கே தேங்கி, கோடையில் முற்றிலும் வறண்டு விடுகிறது.டி.வி.எஸ்., நிறுவனம், துார் வாரி மேம்படுத்த, 2018ல் முயன்றும், நிர்வாக குளறுபடிகளால், அனுமதி தாமதிக்கப்பட்டது. தற்போதைய மழையில், குளம் நிறைந்து, கொடிகள் படர்ந்துள்ளது. இதை துார் வாரி பராமரிக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE