பொது செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : டிச 24, 2020
Share
Advertisement
வியாபாரிகள் சங்க விழாகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய துணி வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா, காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சங்க பெயர் பலகை திறந்து வைத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார். மே, 5ல் நடைபெறும், வணிகர் தினத்திற்கு நிதி

வியாபாரிகள் சங்க விழாகாஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய துணி வியாபாரிகள் சங்க முப்பெரும் விழா, காஞ்சிபுரத்தில் நேற்று முன்தினம் நடந்தது.சங்கத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை வகித்தார். மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா சங்க பெயர் பலகை திறந்து வைத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்டங்களை வழங்கினார். மே, 5ல் நடைபெறும், வணிகர் தினத்திற்கு நிதி வழங்கப்பட்டது.சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சத்துணவு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.நேற்று, கலெக்டர் அலுவலகம் வெளியே, அதன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள், கோரிக்கைகளான சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும்.ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட குடும்ப ஓய்வூதியமாக, 9 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷம் எழுப்பினர்.கண்காணிப்பு ஆய்வு கூட்டம்செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் மற்றும் வன்கொடுமை தடுப்புச்சட்டம், மாவட்ட விழிக்கண், கண்காணிப்பு குழு கூட்டம், செங்கல்பட்டு கலெக்டர் ஜான்லுாயிஸ் தலைமையில், கலெக்டர் அலுவலகத்தில், நேற்று நடந்தது.எஸ்.பி., கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, டி.எஸ்.பி., சேகர் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இந்த ஆய்வு கூட்டத்தில், மாவட்டத்தில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவின் கீழ், 263 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை விரைந்து முடிக்க முடிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X