மாதவரம் - தனியார் நிறுவன குடோனின் இரும்பு, 'கேட்' சரிந்து விழுந்து, காவலாளி பலியான சம்பவத்தில், மற்றொருவர் பலத்த காயமடைந்தார்.சென்னை, மாதவரம், ஓமக்குளம் சாலை, பிள்ளையார் கோவில் அருகே, தனியார் நிறுவன குடோன் உள்ளது. அங்கு, தனியார் செக்யூரிட்டி நிறுவனம் மூலம், மணலி, கண்ணன் தெருவைச் சேர்ந்த பால்சதா, 62, மாதவரம் பெருமாள் கோவில் முதல் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், 60, ஆகியோர், காவலாளியாக வேலை செய்து வந்தனர்.அவர்கள், நேற்று முன்தினம் இரவு, குடோனின் இரும்பு கேட்டை மூடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதன் நகர்வு சக்கரம் பழுதடைந்ததால், 100 கிலோ எடை கொண்ட அந்த, 'கேட்' நிலைதடுமாறி சரிந்து, அவர்கள் மீது விழுந்தது.இருவரும் கேட்டின் கீழே சிக்கினர். அதில், பால்சதா, உடல் நசுங்கி சம்பவ இடத்தில் பலியானார். பலத்த காயமடைந்த ராமகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE