திருவொற்றியூர் - 'காஸ்' சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சமத்துவ மக்கள் கழக மகளிர் அணி சார்பில், 'கும்மியடி' போராட்டம் நடத்தப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.'காஸ்' சிலிண்டர் விலை, 710 ரூபாயாக உயர்த்தப்பட்டதை கண்டித்து, பல்வேறு அமைப்பினரும், ஆங்காங்கே, முற்றுகை, ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதன்படி, சமத்துவ மக்கள் கழக மகளிர் அணி சார்பில், சிலிண்டருக்கு மாலை அணிவித்து, கும்மியடி போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டது.நேற்று காலை, திருவொற்றியூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில், அக்கட்சியின் தலைவர் நாரயணன் அறிவுறுத்தல்படி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற, கும்மியடி போராட்டம் நடந்தது.அப்போது, பெண்கள் சிலிண்டரை சுற்றியவாறு, கோரிக்கைகளை வலியுறுத்தி, கும்மியடித்து போராட்டம் நடத்தினர். வினோதமான போராட்டத்தால், அங்கு, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.பின், போலீசார் சமாதானத்தை தொடர்ந்து கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE