சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூந்தமல்லி சிறையில் இங்கிலாந்து நபர் மர்ம மரணம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
பூந்தமல்லி - பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர், மயங்கி விழுந்து மர்மமான முறையில் இறந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரியில், 5-ம் தேதி, போலீசார் ரோந்து சென்றபோது, தனியாக சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ் பாண்ட், 68,

பூந்தமல்லி - பூந்தமல்லி தனி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த நபர், மயங்கி விழுந்து மர்மமான முறையில் இறந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தருமபுரியில், 5-ம் தேதி, போலீசார் ரோந்து சென்றபோது, தனியாக சுற்றித்திரிந்த வெளிநாட்டு நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ் பாண்ட், 68, என்பதும், உரிய ஆவணங்கள் இன்றி, நீண்ட நாட்களாக தமிழகத்தில் தங்கியிருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, அவரை, தருமபுரி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பூந்தமல்லியில் உள்ள தனி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சிறையில் இருந்த டேவிட் வில்லியம்ஸ் பாண்ட், நேற்று காலை, திடீரென மயங்கி விழுந்தார்.சிறை ஊழியர்கள், அவரை, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், டேவிட் வில்லியம்ஸ் பாண்ட், உயிரிழந்தது தெரியவந்தது.இது குறித்து, சிறை நிர்வாகம் சார்பில், பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து, உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதற்கிடையே, இறந்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் என்பதால், புதிதாக பரவி வரும், கொரோனா வைரஸ் பாதிப்பு அவருக்கு இருந்ததா என, சக கைதிகளிடம் அச்சம் ஏற்பட்டுள்ளது.ஆனால், சிறையில் அடைக்கும் முன், அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில், தொற்று இல்லை என்றும், பல மாதங்களாக, தமிழகத்தில் தங்கியிருந்ததால், புதிய வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும், சிறை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கைதிகளிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கும் வகையில், டேவிட் வில்லியம்ஸ் பாண்டுடன் இருந்த கைதிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில், அவர் உடல் நலக்குறைவால் இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து, பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகே, இறப்புக்கான காரணம் தெரியவரும். இச்சம்பவம் குறித்து, இங்கிலாந்து துாதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்று, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X