பொது செய்தி

இந்தியா

ஆறு மாநில விவசாயிகளுடன் பிரதமர் நாளை ஆலோசனை

Updated : டிச 24, 2020 | Added : டிச 24, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி: ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 'கிசான்' திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் நரேந்திர மோடி நாளை(டிச.,25) வழங்க உள்ளார்.பிரதமரின் 'கிசான்' திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.இந்த
Farmers, PM Modi, PM_KISAN

புதுடில்லி: ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 'கிசான்' திட்டத்தின் கீழ் தலா, 2,000 ரூபாய் உதவித்தொகையை, பிரதமர் நரேந்திர மோடி நாளை(டிச.,25) வழங்க உள்ளார்.

பிரதமரின் 'கிசான்' திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக ஆண்டுக்கு, 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்தப் பணம், விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.


latest tamil news



இந்த ஆண்டின் மூன்றாவது தவணையாக, ஒன்பது கோடி விவசாயிகளுக்கு, 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட உள்ளது. உதவித்தொகை வழங்கும் பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி நாளை துவங்கி வைக்கிறார்.

அப்போது, ஆறு மாநில விவசாயிகளுடன் அவர் பேசுகிறார். இத்திட்டத்தின் பயன் மற்றும் தங்கள் நலனுக்காக, மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த கருத்துகளை, விவசாயிகள் பிரதமருடன் பகிர்ந்து கொள்வர் என, பிரதமர் அலுவலகம்கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - Doha,கத்தார்
24-டிச-202016:12:59 IST Report Abuse
periasamy திரு மோடி அவர்களே விவசாயின் கண்ணீரை துடையுங்கள் விவசாயி நம் நாட்டின் முதுகெலும்பு என்று நம் தேச பிதா கூறியதை மறக்க வேண்டாம்
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-டிச-202013:25:33 IST Report Abuse
Malick Raja கிடைத்த வாய்ப்பை பெரும்பாலான வாசகர்கள் நழுவவே விடுகிறார்கள் .. அறிவார்ந்த வகையில் கருத்துக்கள் இல்லாதது மடைமையின் வெளிப்பாடு
Rate this:
blocked user - blocked,மயோட்
24-டிச-202014:49:27 IST Report Abuse
blocked userமுதலைக்கண்ணீர் வடிக்க வேண்டாம்....
Rate this:
Cancel
24-டிச-202012:46:22 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு விவசாயத்தை நம்பி பிழைக்கமுடியாது என்று பல விவசாயிகள் விவசாயத்தை கைவிட்டுவிட்டு, சென்னை நகரில் வாயிற்காப்பாளர்களாக, தேநீர் விற்பவர்களாக பணிபுரிகிறார்கள் ஒப்பந்த விவசாயம் நடைமுறைக்கு வந்தால் பணப்பயிரைத்தான் சாகுபடி செய்ய சொல்வார்கள் அரிசி, கோதுமை கிடைக்காது பொதுவிநியோகம் ரத்து ஆகிவிடுமாதலால், இறக்குமதி செய்யப்படும் உணவுப்பொருட்களை பொதுமக்கள் அதிக விலை கொடுத்து வாங்கவேண்டியிருக்கும் பசுமை புரட்சிக்கு முன்பிருந்த உணவு பற்றாக்குறை உருவாகும் பெரும்பாலானவர்கள் உண்ணும் கம்பு, கேழ்வரகும் கிடைக்காது பிரிட்டிஷ் ஆட்சியில், இங்கிலாந்தில் பெயிண்ட் தயாரிக்க, இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தி, அவுரி செடிகளை விவசாயம் செய்யவைத்து அங்கு எடுத்து சென்றார்கள்பெரும் போராட்டத்துக்கு பிறகே,அவுரி விவசாயம் கைவிடப்பட்டதுஒப்பந்த விவசாய முறைப்படி, கரும்பு சாகுபடி செய்து, ஆலைகள் விவசாயிகளுக்கு கோடிக்கணக்கில் நிலுவை வைத்திருப்பது எல்லோருக்கும் தெரியும் பெப்சிக்கு உருளைக்கிழங்கு விளைவித்தவர்கள் கதியும் நமக்கு தெரியும்நமது விவசாயிகள் நமக்கு சோறு போடுகிறார்கள் என்ற வாக்கியத்தின் பொருள் அவர்கள் நமக்கு பிச்சை போடுகிறார்கள் என்று பொருள் அல்லஅயல் நாட்டு கடவு சீட்டு வைத்திருப்பவர்கள் நமது நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம் உயர் கோபுரத்தில் இருந்து கொண்டு கருத்துக்களை மனம் போனபடி உதிர்க்கவேண்டாம்இங்கு இருக்கும் மக்கள் அவர்கள் பிரச்னைகளை தீர்த்துக்கொள்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X