பொது செய்தி

இந்தியா

9 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது பூரி ஜெகந்நாதர் ஆலயம் ; ஜன.,3 முதல் பக்தர்களுக்கு அனுமதி

Updated : டிச 24, 2020 | Added : டிச 24, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
புவனேஸ்வர் : கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக நேற்று (டிச.,23) திறக்கப்பட்டது. ஜன.,3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா தொற்றை

புவனேஸ்வர் : கொரோனா தொற்றை தொடர்ந்து ஒடிசாவில் பூரி ஜெகந்நாதர் கோவில் 9 மாதங்களுக்கு பிறகு பக்தர்களுக்காக நேற்று (டிச.,23) திறக்கப்பட்டது. ஜன.,3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் வைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது. ஒடிசாவில் கொரோனா தொற்றை தொடர்ந்து, ஒன்பது மாதங்களுக்கு பிறகு பூரி ஜெகந்நாதர் கோவில் நேற்று (டிச.,23) பக்தர்களுக்காக திறக்கப்பட்டது. அத்துடன் முக்கிய தெய்வங்களான பாலபத்ரா, தேவி சுபத்ரா மற்றும் ஜெகநாத் ஆகியோரின் எதிர்பார்க்கப்பட்ட தரிசனம் காலை 7 மணி முதல் துவங்கியது. ஜெகந்நாத்தின் தரிசனம் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்யவான்கள் என்றும் பக்தர்கள் கூறுகின்றனர்.

கோவில் திறக்கப்பட்ட முதல் 3 நாட்கள் (டிச.,23, 24,25) ஆகிய நாட்களில் கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கோவில் சேவையாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுவாமி தரிசனத்திற்காக கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று பூரி கலெக்டர் பல்வந்த் சிங் கூறினார். மேலும் அடையாள சான்று, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி மற்றும் கைகளை சுத்தமாக வைத்து கொள்வது போன்ற சுகாதார நடவடிக்கையை பின்பற்றுவது அவசியம். கோவில் சேவையாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு முதல் மூன்று நாட்களில் தெய்வங்களின் தரிசனம் அனுமதிக்கப்படும். பூரியில் வசிப்பவர்கள் டிச., 26
முதல் டிச.,31 மாலை வரை கோயிலுக்குள் நுழைய அடுத்த வாய்ப்பு கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


latest tamil news




புத்தாண்டையொட்டி ஜன.,1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் கோவில் மீண்டும் மூடப்படும். பின் ஜன., 3 முதல் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்கு முன்னதாக செய்யப்பட்ட கொரோனா சோதனை சான்றிதழ் அறிக்கை கொண்டு வர வேண்டும். பூக்கள் போன்ற பூஜை பொருட்கள் அனுமதியில்லை. அத்துடன் உள்ளூர் மக்களின் கொரோனா நிலையை அரசு அறிந்திருப்பதால் அவர்களுக்கு சோதனை சான்றிதழ் அறிக்கை தேவையில்லை என அதிகாரிகள் கூறினர். பக்தர்கள் பாதுகாப்பு மற்றும் சுகாதார நடவடிக்கைகளுடன் ஜெகந்நாதரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெகுளி - Maatuthaavani,இந்தியா
24-டிச-202015:49:43 IST Report Abuse
வெகுளி மகிழ்ச்சி.... பாதுகாப்புடன் வழிபட்டு ஜகந்நாதர் அருள் பெறுங்கள்....
Rate this:
Cancel
Sami Sam - chidambaram ,இந்தியா
24-டிச-202009:09:43 IST Report Abuse
Sami Sam கோவிட் -19 நாட்டை விட்டு அகலும் வரை பக்தர்கள் தமது ஊரில் உள்ள ஆலயங்களில் மட்டும் வழிபாடு நடத்துவது அவசியம் மற்ற ஊர்கள் மாநிலங்கள் நாடுகள் தவிர்க்கப்படவேண்டும்
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
24-டிச-202008:30:03 IST Report Abuse
Bhaskaran சிதம்பரம் இளமையாக்கினார் கோவில் பலமாதங்களாக பூட்டப்பட்டு இருக்கிறதாம் இதனை யாரேனும் கவனிப்பார்களா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X