பொது செய்தி

இந்தியா

போர் நிறுத்தம், பேச்சுக்கு தயார்; நாகா அமைப்பு அறிவிப்பு

Updated : டிச 24, 2020 | Added : டிச 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
கோஹிமா: நாகாலாந்தில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், போர் நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, என்.எஸ்.சி.என்.கே., எனப்படும் பிரிவினைவாத அமைப்பு அறிவித்துள்ளது. பேச்சு நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகாலாந்தில், முதல்வர், நீபு ரியோ தலைமையிலான, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி அரசு அமைந்துள்ளது.
NSCNK, Naga, PeaceTalks, Hopes, Centre, Positively, போர் நிறுத்தம், பேச்சுவார்த்தை, நாகாலாந்து, நாகா, அமைப்பு

கோஹிமா: நாகாலாந்தில் அமைதி ஏற்படுத்தும் முயற்சிகளுக்கு உதவும் வகையில், போர் நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, என்.எஸ்.சி.என்.கே., எனப்படும் பிரிவினைவாத அமைப்பு அறிவித்துள்ளது. பேச்சு நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, நாகாலாந்தில், முதல்வர், நீபு ரியோ தலைமையிலான, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி அரசு அமைந்துள்ளது. இங்கு நீண்டகாலமாக, பிரிவினைவாத பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வுகாணும் வகையில், பிரிவினைவாத அமைப்புகளுடன் பல சுற்று பேச்சு நடந்து வருகிறது. என்.எஸ்.சி.என்.ஐ.எம்., என்ற அமைப்புடன், 18 ஆண்டுகளில், 80 சுற்று பேச்சுக்குப் பிறகு, 2015ல் உடன்படிக்கை ஏற்பட்டது. இந்நிலையில், என்.எஸ்.சி.என்.கே., என்ற அமைப்பின் தலைவர், நிகி சுமி, வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:


latest tamil news


நாகாலாந்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். மக்களின் விருப்பம், எதிர்பார்ப்புகளை மதிக்கும் வகையில், அமைதி நடவடிக்கைகளில் அரசுக்கு ஒத்துழைக்க தயாராக உள்ளோம்.கடந்த சில ஆண்டுகளாக, மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. அதனால், போரை நிறுத்தி, அமைதி பேச்சுக்கு தயாராக உள்ளோம். இது குறித்து அரசுக்கு தெரியபடுத்தியுள்ளோம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் முடிவுக்கு, நாகாலாந்து அரசு வரவேற்பு தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KavikumarRam - Indian,இந்தியா
24-டிச-202021:29:17 IST Report Abuse
KavikumarRam கிறித்தவ மிஷனரிகளுக்கும் என்ஜிஓ க்களுக்கும் கணக்கு கேட்டு ஃபாரின் ஃபண்டுக்கு மோடி வச்ச ஆப்பு, நம் இந்திய நாடு பல வழிகளில் முன்னேற்ற பாதைகளில் செல்ல ஆரம்பித்திருக்கிறது.
Rate this:
Cancel
24-டிச-202010:04:48 IST Report Abuse
ஆரூர் ரங் இந்த இயக்கங்கள் மக்களிடம் வரி என்று சொல்லிக்கொண்டு மிரட்டி மாமூல் வாங்குகின்றனர். அதனை (பாஜக) கவர்னர் கடுமையாக எதிர்த்ததால் ஆத்திரத்தில் பயங்கரவாதத்தில் ஈடுபட முயன்றனர். ராணுவம் அதற்கு ஆப்பு வைப்பதாலும் அன்னிய மிஷனரி என் ஜி ஓக்களுக்க்கு மோதியால் நிதி நின்றதாலும் இப்போ கைப்புள்ள☹ ரேஞ்சில்🙃 சமாதானத்துக்கு அடிப்போடுகிறார்கள். 65 ஆண்டுகளாக பிரச்னையைத் தீர்க்காமல்..வாக்கு 😉வங்கிக்காக அன்னிய மிஷனரிகளை வளரவிட்டதன் பலன்
Rate this:
Cancel
ANTONYRAJ - MADURAI,இந்தியா
24-டிச-202009:54:51 IST Report Abuse
ANTONYRAJ "நாகாலாந்தில் அமைதி ஏற்பட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்" இந்த தீவிரவாதிகளிடம் இத்தனை வருடங்களாக இல்லாத இந்த ஞானோதயம் இப்ப மட்டும் திடீர்னு எங்கிருந்து வந்தது? NGO க்கள் மூலம் இவர்களுக்கு வந்த வெளிநாட்டு பணம் முற்றிலுமாக மோடி அரசு தடை பண்ணி விட்டது.அதே போல் இவர்களுக்கு சர்வ சாராரணமாக எல்லையில் கிடைத்த ஆயுதங்கள் வரும் வழி நிரந்தரமாக மூடப்பட்டு விட்டது. கம்யூனிஸ்ட்களுக்கும், ஊடகத்திற்கும் வெளியே தெரியாமல் எத்தனை தீவிரவாதிகளை ராணுவம் கொன்று புதைத்திருக்கிறது என்பது இந்த தீவிரவாதிகளுக்கு தெரியாதா என்ன? மரண பயத்தை கண் முன்னே பார்த்த பிறகு வேற வழி? சரணடைந்துதானே ஆகணும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X