ஈரோடு: ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில், மின் தடை குறித்து புகார் தெரிவிக்க, கட்டணமில்லா தொலைபேசி எண்: 1912 1800-425-11912, தொலைபேசி எண்: 0424 2260066, 2240896, மின் கம்பம் சாய்ந்து விழுதல், மின் கம்பி தாழ்வாக இருத்தலுக்கு வாட்ஸ் ஆப் எண்: 94458 51912ல் புகைப்படத்துடன் பதிவு செய்யலாம். தனி நபர் மின் தடை புகாரை, காலை, 8:00 மணி முதல் மாலை, 5:00 மணி வரை மட்டுமே சரி செய்வார்கள். கணினி மயமாக்கப்பட்ட மின் தடை பதிவு மையத்தில் செயல்பட்ட, 94458 57205, 94458 57206, 94458 57207, 94458 57208 என்ற எண்கள் தற்போது உபயோகத்தில் இல்லை. பணம் கேட்டால் புகார் தரலாம் மின் தடையை சரி செய்ய, புதை வடங்கள், வேறு தளவாட பொருட்கள் வாங்க, ஊழியர்கள் பணம் கேட்டால், மக்கள் புகார் தெரிவிக்கலாம். இதற்காக, 'விழிப்புப்பணி அலுவலர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்/விழிப்புணர்வு, தமிழ்நாடு மின்வாரியம், என்.பி.கே.ஆர்.ஆர்.மாளிகை, 144 அண்ணா சாலை, சென்னை - 600 002, போன்: 94458 57593, 94458 57594' என்ற தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE