ஈரோடு: ஈரோடு, கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு விழா, நாளை அதிகாலை, 4:45 மணிக்கு நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று இரவு, 8:00 மணிக்கு பிறகு, நாளை காலை, 6:00 மணி வரை, அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளது. காலை, 6:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை தரிசனத்துக்கு மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். கூட்ட நெரிசலை தவிர்க்க, கோவிலில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது. தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், ராஜகோபும் வழியாக நுழைந்து, முன் மண்டபம் வழியாக உள்ளே வந்து, பரமபத வாசலை கடந்து செல்ல வேண்டும். பிறகு கமலவல்லி தாயார் மற்றும் உற்சவரை தரிசனம் செய்த பின், கோவிலில் இருந்து வெளியேறிவிட வேண்டும். கோவிலில் அமரக்கூடாது. பக்தர்கள் விரைவாக வெளியேற வேண்டும் என்பதால், மூலவரை தரிசனம் செய்ய முடியாது. இந்த உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதை கண்காணிக்க, 14 இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE