பொது செய்தி

தமிழ்நாடு

பாதாள சாக்கடை திட்டத்தால் பள்ளம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
ஈரோடு: பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்துக்காக தோண்டிய குழிகள், பள்ளமாக மாறி வருவதால், மாநகர மக்கள் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாநகராட்சி பகுதி முழுவதும், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்துக்காக பெரிய அளவில் குழி தோண்டி, குழாய் பதித்து, முறையாக, முழுமையாக மூடாமல் வைத்துள்ளனர். கடந்த சில வாரமாக பெய்த மழையால், குழிகளில் தண்ணீர் தேங்கி பள்ளமாகி

ஈரோடு: பாதாள சாக்கடை, குடிநீர் திட்டத்துக்காக தோண்டிய குழிகள், பள்ளமாக மாறி வருவதால், மாநகர மக்கள் சிரமப்படுகின்றனர். ஈரோடு மாநகராட்சி பகுதி முழுவதும், பாதாள சாக்கடை திட்டம் மற்றும் ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டத்துக்காக பெரிய அளவில் குழி தோண்டி, குழாய் பதித்து, முறையாக, முழுமையாக மூடாமல் வைத்துள்ளனர். கடந்த சில வாரமாக பெய்த மழையால், குழிகளில் தண்ணீர் தேங்கி பள்ளமாகி விட்டன. தவிர ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட குழாய், பல இடங்களில் அவ்வப்போது உடைந்து, தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் பள்ளங்கள், மூன்றடிக்கு மேல் ஆழமாக மாறி, தண்ணீரும் தேங்கி ஆபத்தாக உள்ளது. கருங்கல்பாளையம், கொங்கு நகர் வீதியில் பாதாள சாக்கடை குழியில், ஊராட்சி கோட்டை குடிநீர் திட்ட குழாய் உடைந்து, நீர் சேர்ந்து ஆபத்தான பள்ளமாகி, வாகன விபத்து ஏற்பட்டது. வாகனத்தை மீட்ட மக்கள், அப்பள்ளத்தை சுற்றிலும் கல், கட்டை வைத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம், குடிநீர் வடிகால் வாரியத்தினர், சீரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X