பவானிசாகர்: பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதிக்கு, தண்ணீர் தேடி வரும் யானைக்கூட்டம், நீரில் குளித்து குதூகலம் அடைகின்றன. பவானிசாகர் வனப்பகுதியை ஒட்டி, பவானிசாகர் அணை நீர்த்தேக்கப்பகுதி உள்ளது. இங்கு, காலை மற்றும் மாலை நேரங்களில், யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் தேடி படையெடுக்கின்றன. வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகள், சில நாட்களாக மாலை நேரங்களில், குட்டிகளுடன் அணை மேல் பகுதியை கடந்து, தண்ணீர் குடிக்க வருகின்றன. நேற்று மாலை, அணை ஜீரோ பாயிண்ட் அருகே, ஐந்துக்கும் மேற்பட்ட யானைகள் நீர்த்தேக்க பகுதிக்கு, குட்டிகளுடன் தண்ணீர் குடிக்க வந்தன. தாகம் தீர்த்தவுடன் திரும்பாமல், வெகுநேரம் தண்ணீரில் விளையாடின. அணை நீர்த்தேக்கத்தில் குட்டிகளுடன் குதூகலமாக யானைகள் விளையாடுவது, சமீப நாட்களாக அடிக்கடி நடப்பதாக, மீனவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE