கோபி: கள்ளக்காதலி கொலை வழக்கில், கள்ளக்காதலனுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, கோபி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே, அளுக்குளியை சேர்ந்த குமார் மனைவி தங்கமணி, 29; கணவர் குமாரை பிரிந்து, இரு பெண் குழந்தைகளுடன், பெற்றோர் வீட்டில் வசித்தார். கடந்த, 2019 மார்ச், 25ல், தடப்பள்ளி வாய்க்காலில், தங்கமணி சடலமாக மிதந்தார். கடத்தூர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில், அத்தாணியை சேர்ந்த சின்னச்சாமி, 35, அளுக்குளி வி.ஏ.ஓ.,விடம் சரணடைந்தார். கைது செய்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தங்கமணி, சின்னச்சாமி இடையே கள்ளத்தொடர்பு இருந்தது தெரிந்தது. இதனால் ஏற்பட்ட தகராறில், கழுத்தை நெறித்து, வாய்க்கால் தண்ணீரில் அழுத்தி, தங்கமணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். வழக்கு விசாரணை, கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. இதில் நீதிபதி ஜெகநாதன், நேற்று தீர்ப்பளித்தார். சின்னச்சாமிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து ஈரோடு மாவட்ட சிறையில், சின்னச்சாமி அடைக்கப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE