சேலம்: சக பெண் நூலகர்கள் இருவரை சீண்டிய, மூன்றாம் நிலை நூலகர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை, சத்திரத்தில், திருமால் மாநகர கிளை நூலகம் உள்ளது. அங்கு, மூன்றாம் நிலை நூலகராக உள்ளவர் மணிவண்ணன், 50. இவருடன், அதே நிலை, பெண் நூலகர்கள் இருவர் பணிபுரிகின்றனர். அவர்களை, அடிக்கடி சீண்டி பேசிய மணிவண்ணன், தவறான அர்த்தத்துடன் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளார். இதை, பலமுறை கண்டித்தும், அவர் திருந்தவில்லை. பாதிக்கப்பட்ட பெண் நூலகர்கள், எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தனர். விசாரணையில், ஏற்கனவே, 2017 - 18ல், வாழப்பாடியில் பணிபுரிந்தபோது, பணி நேரத்தில் ஆபாச படம் பார்த்ததோடு, அங்கும், பெண் நூலர்களுக்கு, நெருக்கடி கொடுத்தது தெரிந்தது. இதனால்தான், சேலத்துக்கும் மாற்றப்பட்டுள்ளார். இதன் பிறகும், பாலியல் புகாரில் சிக்கியதால், மணிவண்ணணை, 'சஸ்பெண்ட்' செய்து, மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, நேற்று முன்தினம் உத்தரவிட்டார். அதன் நகல், நூலக இயக்குனர், விசாரணை கமிட்டி உள்பட, ஆறு பேருக்கு, தனித்தனியே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க, சேலம் மாவட்ட தலைவராகவும், பொது நூலகத்துறை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலராகவும் மணிவண்ணன் உள்ளார். அவர் மீதான, 'சஸ்பெண்ட்' நடவடிக்கையை கண்டித்து, இன்று மாலை, 5:00 மணிக்கு, ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE